Friday, September 9, 2011

அதிகமாக பொய் பேசுபவர்களை அழைக்கப்பயன்படும் வார்த்தையும் அதன் விளக்கமும்

 நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு தெரிந்திருக்காது பொய் பேசுபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று . அதிகமாக பொய்  பேசுபவர்கள் கோயபல்ஸ்  என்று அழைக்கப்படுகிறார்கள்.( சரி சரி விஷயத்துக்கு வா என்ற உங்கள் மைன்ட் வாய்ஸ் கேக்குது.. ஓகே ).  எல்லோரும் அறிந்த  ஜெர்மன் சர்வதிகாரி அடால்ப் ஹிட்லரின் செயலாளராக இருந்தவர் பெயர் தான்  கோயபல்ஸ். ஹிட்லருக்கு எந்த அளவுக்கு யூதர்களை பிடிக்காதோ அதைவிட பன்மடங்கு நம்ம   கோயபல்ஸ்க்கு  பிடிக்காது . அதனால இவர் என்ன பண்ணாரு தெரியுமா ? அட்டாக்     அப்படின்னு ஒரு பத்திரிக்கையை ஆரம்பிச்சு யூதர்களை பற்றி பொய்யான தகவல்களை வெளியிட்டு ஜெர்மானியர்களுக்கு யூதர்கள் மேல் ஒரு கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தினார். யூதர்களை பற்றிய பொய்யான கருத்துக்களை படிப்போரை ஈர்க்குமாறு எழுதினாரு அதனால அந்த பத்திரிக்கையின் விற்பனை நம்ம ஹாட் சிப்ஸ் காபிய விட பயங்கர விற்பனையானது . இதை பயன்படுத்தி ஹிட்லரும் அப்பிராணிகளான யூதர்களை கொடூரமா கொன்று குவிச்சாரு. உண்மையில் யூதர்கள் ரொம்ப நல்லவங்க ஜெர்மனியின் வளர்ச்சிக்காக பாடுபட்டாங்க  . எப்படி சர்வதிகாரி என்றால் ஹிட்லரோ அது போல பொய் சொல்வதற்கு பெயர் போனவர் கோயபல்ஸ். ஆகையால் தான் பொய் சொல்பவர்கள் கோயபல்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். 

( ஆனா நான் உண்மையை சொல்லிடுரனுங்க இந்த விஷயத்தை நான் ஒரு புக்குல இருந்துதானுங்க  சுட்டு பதிவு செஞ்சுருக்கேன் )

No comments:

Post a Comment