Thursday, September 8, 2011

படித்தில் பிடித்தது



1.ஆசை
       ஆசை  இல்லாத வாழ்க்கை ஒன்றை நாம் எப்போது வாழ ஆரம்பிக்கிறோமோ அப்போதே துன்பம் இல்லாத வாழ்க்கை நம்மை தேடி வரும் . ஒரு ஆப்பிள் பழத்துக்குள் எத்தனை விதை உள்ளது என்று நம்மால் எளிதாக எண்ணி விட முடியும் . ஆனால் ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள் உள்ளது என்று நம்மால் எண்ண முடியாது . அதே போல் கண்ணுக்கு தெரியாத வருங்காலத்தை எண்ணாமல் வாழும் நிகழ் காலத்தை சந்தோசமாய் களிப்போம் .

2 . கவலை 
           எதற்கும் வருத்தப்படவேண்டாம்  ௨ங்களுடைய  கடந்த கால அனுபவங்களில் இருந்து நீங்கள் பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடங்களை அடிக்கடி நினைத்துப் பாருங்கள் அவை உங்கள் எதிர் காலத்துக்கு நல்ல வழிகாட்டியாய் அமையும் . கவலைகளை ஜீரணித்துக் கொள்பவன் நாட்களை சந்தோசமாய் கழிப்பான் .

3 . பிரச்சனை 
                            பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில்  பூட்டுக்கள் மட்டும் தயாரிக்கப்படுவது இல்லை . அந்தப் பூட்டுகளோடு சாவிகளும் சேர்ந்தே தயாரிக்கப்படுகின்றன . அதே போல் கடவுள் நமக்கு பிரச்சனைகளை மட்டும் கொடுப்பது இல்லை அதற்கான தீர்வுகளையும் சேர்த்தே தருகிறார் . அதை பயன் படுத்துவதும் பயன் படுத்தாமல் இருப்பதும்  அவரவர் கையில் தான் உள்ளது.

4 . விவாதம் 
                         எக்காரணத்தை முன்னிட்டும் யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள் அதில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பாதீர்கள் . அந்த வெற்றி உங்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராது. மாறாக உங்களுக்கு ஆணவத்தை ஏற்படுத்தும் . மற்றவரை புண்படுத்தும். நண்பர்களிடையே பிளவை ஏற்படுத்தும் .( சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளின் பின்னூட்டங்களில் இது போன்ற விவாதம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது )

 5 .  விருப்பு - வெறுப்பு  

                             ஒருவரை வெறுப்பது கூட உண்மையாக இருக்கலாம் .ஆனால் நேசிப்பது மட்டும் பொய்யாக இருந்துவிடக்கூடாது . வாழ்க்கையில் எல்லோரையும் நேசியுங்கள் ஏனெனில் நல்லவர்கள் ௨ங்களுக்கு சந்தோசத்தையும் மோசமானவர்கள் அனுபவத்தையும் கொடுப்பார்கள். எனவே இரு சாராரும் நமக்கு வேண்டியவர்களே ..











No comments:

Post a Comment